நவரத்தினம்(GEMS)
நவரத்தின கோபுரம்

ஜாதகத்தில் லக்ன பலம் மிக முக்கியம். லக்னத்திற்க்கு 5 , 9-க்கு அதிபதியின் ரத்தினம் அணிவது சுப பலன் தரும். பிறந்த தேதிக்கும் ரத்தினம் அணிவது, சிறப்பான விஷயம் தான். மேலும் ஆங்கில மாத கணக்குப்படி ரத்தினம் அணியும் முறை நல்ல பலனைத் தரும். ஒருவர் பிறந்த நட்சத்திரம் எந்த நட்சத்திரம் என்று தேர்ந்தெடுத்து, நவ கிரக, லட்சுமி, ஹோமம், யாகம் வளர்த்து பூஜைப் பொருட்களுடன் ரத்தினத்தையும் வைத்து ஆவாகனம் செய்து ரத்தினத்தை அணிந்தால் விரைவாக நல்ல பலன் கிட்டும். ராசிப்படி ரத்தினம் அணிய அனுபவம் மிக்க ஜோதிடர் அனுமதி தேவை. தவறான ரத்தினம் அணிவதால் பிரச்சனைகள் அதிகமாகும் குறையாது. சரியாக தேர்ந்தெடுத்து ரத்தினம் அணிவதால் திருமணத்தடை விலகி, திருமணம் கைகூடிவரும், தொழிலில் வெற்றி கிட்டும், நோய் நொடிகள் குறையும், விலகும். துர்சக்தியை துரத்தும்.மேலும் தன்னைக்காக்கும் கவசமாக இருக்கும். பலரும் தவறான ஜாதகத்தை வைத்துக்கொண்டு பலன் தேடி அலைகின்றார்கள். பலன் சொல்ல எப்படி சரியாக வரும்? ரத்தினம் தேர்வு செய்யும் முன் ஜாதகத்தை சரி பார்ப்பது அவசியம்! சரியான ரத்தினம் அணிந்தால் உங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். எண்ணம், சொல், செயல் ஒரு நேர் கோட்டில் இருந்தால் உங்கள் வாழ்க்கை நிச்சயம் வளமாகும்.ரத்தினம் அணிந்து வாழ்வுயர வாருங்கள்! வெற்றி நிச்சயம்!